முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தினம்: சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு : முக்கிய இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      தமிழகம்
Police-check 2023 01 25

Source: provided

சென்னை : குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இன்று குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் தீவிர எச்சரிக்கையுடன் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

அதே போல், தமிழக அரசு சார்பில் காமராஜா் சாலையில் (கடற்கரைச் சாலை) உழைப்பாளா் சிலை அருகே இந்தாண்டு குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளதால், நேற்றுமுன்தினம் முதல் அந்த சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை விமான நிலையம், காமராஜர் சாலைகளில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு சோதனை நடைபெறும் நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகர எல்லைப் பகுதிகளான திருவொற்றியூா், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தின விழா நடைபெறும் மெரீனா காமராஜா் சாலையிலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் இன்று 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சென்னை முழுவதும் 6,800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி இன்று சென்னையில் டிரோன்கள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து