முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? - பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கேள்வி

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      இந்தியா
Nitish-Kumar 2023 01 27

Source: provided

பாட்னா : மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “நம்மைப் போன்ற ஏழை மாநிலங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது” என்று நிதிஷ் குமார் கூறினார்.

பீகாரில் பாஜக உடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்த ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே (ஆகஸ்டு) திடீரென பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்டிரீயஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியில் சேர்ந்து புதிய அரசை அமைத்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக நிதிஷ்குமார் அறிவித்தார். இந்த நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, "ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும்" என்றவர், பீகாருக்கு மத்திய அரசு பெரிய அளவில் உதவ வேண்டும், சிறப்பு தகுதி வழங்க வேண்டும் என்ற  தனது கோரிக்கைகள் இன்னும் நிறை வேற்றப்படவில்லை என்று கூறினார்.

மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம்சாட்டிய நிதிஷ் குமார், “எங்களைப் போன்ற ஏழை மாநிலங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.” முன்பு மத்திய நிதி இல்லாதபோது அதைக் கடன் வாங்கியே ஈடுகட்டினோம். இப்போது அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதுபோன்ற மத்திய அரசின் தலையீட்டை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை" என்று நிதிஷ்குமார் பதில் அளித்தார்.

அடுத்த நிதியாண்டில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதமாக மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான முன்மொழியப்பட்ட வரம்பைக் குறிப்பிடும் வகையில் பேசியவர், ரயில்வே துறையின் தனி பட்ஜெட் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியவர், ஒரு வகையில், நவீன இந்தியப் பொருளாதாரம் அதன் வேர்கள் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்வேயில் உள்ளது," என்று நிதிஷ்குமார் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து