முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் ராகுலின் பாத யாத்திரை திடீர் ரத்து : பாதுகாப்பு குளறுபடி என காங். குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      இந்தியா
Rahul 2023 01 27

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை ரத்து செய்யப்பட்டதற்கு பாதுகாப்பு குளறுபடி என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். குடியரசு தினத்தையொட்டி நேற்று யாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் யாத்திரையை தொடங்கினார்.

பனிஹாலில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, பனிஹால் சுரங்கத்தை கடந்தபோது, மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி ராகுல் காந்தியை பாதுகாப்பு வாகனத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி நேற்றைய யாத்திரையை காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று 20 கிலோ மீட்டர் தூரம் நடக்க திட்டமிட்டிருந்த ராகுல் காந்தி, பனிஹாலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகு யாத்திரையை நிறுத்த வேண்டியிருந்தது.

ராகுல் காந்தி காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சென்றபோது, திடீரென பாதுகாப்பு விலக்கப்பட்டதால், அங்கு காத்திருந்த ஏராளமானோர் பாதுகாப்புப் பகுதியை மீறிச் சென்றதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் திடீரென திரும்ப பெறப்பட்டது கடுமையான பாதுகாப்பு மீறலை ஏற்படுத்தியது என்றும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து