முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிபுரா சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்., பா.ஜ.க,

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      இந்தியா
BJP-1 2023 01 19

Source: provided

அகர்தலா : திரிபுரா சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. 

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகியவற்றின் சட்டசபை பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு இந்த 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. 

அதன்படி திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வெளியிட்டுள்ளன. முதற்கட்டமாக 48 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. அறிவித்துள்ளது. அதே போல் காங்கிரஸ் சார்பில் முதற்கட்டமாக 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து