முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      விளையாட்டு
jokovic 2023 01 29

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ஜோகோவிச்.

ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலின் (22 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார் . மெல்போர்ன், ஆண்டின் முதலாவது 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)-சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினர் . 

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி ஜோகோவிச் சிறப்பாக விளையாடினார். இதனால் 6-3, 7-6 , 7-6 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது ஜோகோவிச் வென்ற 22 -வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும் . இதனால் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலின் (22 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து