முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான், பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் 25 பேர் பலி : 100-க்கும் மேற்பட்டோர் காயம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      உலகம்
Pak 2023 01 30

Source: provided

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும் , 100க்கும் மேற்பட்டோ் காயமுற்றதாகவும் பாக்., செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. போலீஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது.

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 25 பேர் பலியாகி உள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர். போலீஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து