முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் முறையாக ஈரோடு இடைத்தேர்தலில் அறிமுகம்: பாதுகாப்பு அம்சத்துடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை : தலைமை தேர்தல் அதிகாரி சாகு அறிவிப்பு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      தமிழகம்
Satyapratha-Sagu 2022-12-30

Source: provided

சென்னை : பாதுகாப்பு அம்சத்துடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார். 

இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முதற்கட்டமாக புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பழைய வாக்காளர் அட்டையில் மாற்றம் எதுவும் செய்தால் புதிய அம்சங்கள் கொண்ட புதிய அட்டை வழங்கப்படும் என சாகு தெரிவித்துள்ளார்.  மேலும் பழைய அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அட்டை பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோஸ்ட் இமேஜ்' எனப்படும் புதிய அம்சம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு , புதிய வாக்காளர் அட்டையில் QR கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெறும் ( பூதக்கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க முடியும்). பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட்டுள்ளது. அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ஹோலோகிராம் இனி அட்டைக்குள் இடம்பெறும் என்றார். 

அடையாள அட்டை முன்புறம் வாக்காளரின் புகைப்படமும், அவரது நெகட்டிவ் இமேஜ் போன்ற படமும் இடம்பெறும். போலியான அடையாள அட்டைகள் உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாக்காளர் அட்டை வழங்கப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து