முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம்: எம்.பி.ரவீந்திரநாத், தம்பிதுரை பங்கேற்பு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      இந்தியா
Ravindra-Nath 2023 01 30

Source: provided

புதுடெல்லி : மத்தி பட்ஜெட் குறித்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.ரவீந்திரநாத், தம்பிதுரை பங்கேற்றனர்.

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை நேற்று மாலை நடைபெற்றது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  அதன்படி, அ.தி.மு.க.வின் மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓ.பி.எஸ்.ஸின் மகன் எம்.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாரளுமன்றத்தில் விவாதிக்கக்கூடிய விஷயங்கள், அவையை அமைதியாக நடத்துவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவும் ஓ.பி.ரவிந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாராளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் தம்பிதுரைக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் 2 பேரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து