முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை எதிரொலி: உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 இடத்தை இழந்த அதானி

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      இந்தியா
Gautam-Adhani 2023 01 27

Source: provided

புதுடெல்லி : அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கையால், கடந்த சில நாட்ளாக அதானி குழும நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் சரிந்ததைத் தொடர்ந்து, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருந்து அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 3 வர்த்தக நாட்களில் தனிப்பட்ட சொத்து மதிப்பில் 34 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்ததைத் தொடர்ந்து, தற்போது, 84.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் ப்ளூம்பர்க் பில்லினியர் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்து 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் அதானி.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வரும் கவுதம் அதானி கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இந்தநிலையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அண்மையில் அறிக்கை வெளியிட்டது. இதன் எதிரொலியாக, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்தன.

தற்போது அதானி உலக கோடீஸ்வரர்கள் வரிசையில், பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ், கூகுள் இணை நிறுவனர்களான லாரி பேஜ், செர்ஜி பிரின் போன்றவர்களுக்குப் பின்னால் உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் 82.2 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அதானியைத் தொடர்ந்து 12-வது இடத்தில் உள்ளார். முன்னதாக, சொத்து மதிப்பில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சரிவு காரணமாக ‘ஃபோர்ப்ஸ்’ (Forbes) ரியல் டைம் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து