எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நிதியாண்டிற்கான ரியல் ஜிடிபி 6.5 சதவீதம், நாமினல் ஜி.டி.பி 11 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கும்.
ரஷ்யா உக்ரைன் மோதல் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் 2019ல் 8.3 சதவீதம், 2022 செப்டம்பர் மாதத்தில் 7.2 சதவீதம்ஆக குறைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8 சதவீதம் ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் இது 6-6.8 சதவீதம் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
2023ம் ஆண்டின் வளர்ச்சி, பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சிக்கல், முதலீடுகள் கடன், ஏற்றுமதி, இறக்குமதி வருவாய் போன்றவை தொடர்பான விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும். இந்த ஆய்வறிக்கை நிதி துறையின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவு சார்பாக உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


