முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதி: ஏழைகள் இல்லாத புதிய இந்தியாவை உருவாக்குவோம் : பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      இந்தியா
Murmu 2023 01 31

Source: provided

புதுடெல்லி : ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும்,  ஏழைகள் இல்லா புதிய இந்தியா உருவாகும் என்றும் பாராளுமன்ற இரு அவைகள் கூட்டுக்கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றிய ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, மரபுப்படி பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் நேற்று முதன்முறையாக ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை நிகழ்த்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது.,

சுதந்திரத்தில் 75-வது ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் உரையாற்றுகிறேன். இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம். 2047-ம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். ஏழைகள் இல்லாத புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். அதில் பழங்காலத்து பெருமையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் இருக்க வேண்டும்.

இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் சவால் நிறைந்ததாக இருக்கும். 2047-ம் ஆண்டில் முழு வளர்ச்சியை காண்பதற்காக அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏழைகள் இல்லாத புதிய இந்தியா உருவாகும். அனைத்து தரப்பினரும் நல்ல நிலையில் இருக்கும் நிலை அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக வேண்டும். வெளிநாடுகளில் ஆதரவில் இருந்த நாடு சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளது. சுய சார்பு நாடாக மாறி உள்ளது. இந்தியா நவீன கட்டமைப்பை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தை அடைந்திருக்கிறது.

நாட்டின் இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது. உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. மற்ற நாடுகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன. இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து