எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்துள்ள 2023-24-ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில்,
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம், இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New regime (புதிய முறைக்கு) மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, Old regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது. மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது. மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.
நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, ஒன்றிய அரசு இத்திட்டத்தின்கீழ், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.
ஒன்றிய அரசின் திட்டங்கள் Results based financing என்ற ஒரு புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக (pilot basis) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே, இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில், ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது ஒன்றிய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த ஒன்றிய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
21 Oct 2025டோக்கியோ : ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
அமைதி ஒப்பந்தம் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் விருப்பத்தை நிராகரித்த ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி
21 Oct 2025இஸ்ரேல் : அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு ட்ரம்ப் விருப்பத்தை ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி நிராகரித்தார்.
-
புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்
21 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
மகளிர் உலகக் கோப்பை: முதல் அணியாக வெளியேறியது வங்கதேசம்
21 Oct 2025மும்பை : மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
-
பீகார் தேர்தலில் பின்வாங்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
21 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பின்வாங்கினார்.
-
இந்திய கேப்டன் வேதனை
21 Oct 2025மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியான தோல்விகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியுள்ளார்.
-
வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இந்திய ராணுவத்தினர்
21 Oct 2025கொல்கத்தா : இந்திய ராணுவத்தினர் வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.
-
ரிஸ்வான் அதிரடி நீக்கம்: பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் கேப்டன் நியமனம்
21 Oct 2025லாகூர் : ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷாகீன் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தங்கத்தால் செய்யப்பட்ட ‘சுவர்ண பிரசாதம்’ ஒரு கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்பனை
21 Oct 2025ஜெய்ப்பூர் : தங்கத்தால் செய்யப்பட்ட ‘சுவர்ண பிரசாதம்’ ஒரு கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
-
டெல்லி இனிப்பு கடையில் ‘ஜிலேபி’ செய்த ராகுல்காந்தி
21 Oct 2025புதுடெல்லி : டெல்லி இனிப்பு கடையில் ராகுல்காந்தி ஜிலேபி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
-
ஜப்பானின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
21 Oct 2025ஜப்பான் : ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சனே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
21 Oct 2025புதுடெல்லி : உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்துகிறேன் என்று நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
மகளிர் உலகக்கோப்பை 22வது லீக்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு
21 Oct 2025கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்க அணி 312 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2025.
22 Oct 2025 -
இந்தியா - தெ.ஆ. டெஸ்ட் போட்டி: குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60
21 Oct 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60 என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
திருவாரூரில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்த இ.பி.எஸ்
22 Oct 2025திருவாரூர், திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.