முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 50 விமான நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      இந்தியா
Nirmala-Sitharaman 2023 02

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட 9 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்களை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும், நெடுஞ்சாலை பணிகள் போன்ற பொதுப் போக்குவரத்து திட்டத்திற்காக ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்குவதாகவும் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து