முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட் தரவரிசை: அதிக புள்ளிகளை பெற்ற 2-வது வீரராக சூர்யகுமார்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      விளையாட்டு
Suryakumar 2023 02 01

Source: provided

துபாய் : தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 47 ரன்கள் எடுத்தார். இதனால் 908 புள்ளிகள் பெற்றுள்ளார்.இதன்மூலம் டி20 தரவரிசையில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற 2-வது வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார்      

முதல் இந்திய வீரர்...

ஐசிசி டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையைச் சமீபத்தில் படைத்தார் சூர்யகுமார் யாதவ். இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார். ஐசிசி டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையுடன் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இதற்கு முன்பு டேவிட் மலான், ஆரோன் ஃபிஞ்ச் ஆகிய இருவரும் மட்டுமே 900 புள்ளிகளை அடைந்துள்ளார்கள். இந்திய வீரர்களில் கோலி அதிகபட்சமாக 897 மற்றும் ராகுல் 854 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள்.

908 புள்ளிகளுடன்...

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் 47 ரன்கள் எடுத்தார். இதனால் 908 புள்ளிகள் பெற்றுள்ளார். இதன்மூலம் டி20 தரவரிசையில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிகப் புள்ளிகளைப் பெற்றவர், இங்கிலாந்தின் மலான். அவர் எடுத்த 915 புள்ளிகளை சூர்யகுமார் விரைவில் நெருங்கி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து