முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகாலாந்து சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      இந்தியா
Bjp 20221 02 02

Source: provided

கோகிமா: நாகாலாந்து மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. 

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 27ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடுகிறது. 

மாநில தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக மத்திய தேர்தல் குழு ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து நேற்று நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.  60 தொகுதிகளுடைய நாகாலாந்து சட்டப்பேரவையில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதனால், 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதில், மாநில தலைவராக தெம்ஜென் இம்னா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அலோங்டாகி தொகுதியில் களமிறங்குகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து