முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்: சி.டி.ரவி

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      தமிழகம்
CD-Ravi 2023 02 03

Source: provided

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்தார். 

முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை தனித்தனியே சந்தித்த பின் தமிழ்நாடு பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் சி.டி. ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை மிகப்பெரிய அளவில் உள்ளது. தி.மு.க. ஒரு குடும்பத்திற்காக உழைத்து வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க. 

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்களால், மூத்த தலைவர்களால் தமிழ் கலாச்சாரம் மீது தொடர் தாக்குதல் நடைபெறுகிறது.

கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு போன்றவை தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் தமிழ் மக்கள் உள்ளனர் என்பதை காட்டுகிறது. இடைத்தேர்தல் எப்படி நடக்கும் என்று நாம் அனைவருக்கும் தெரியும். 

எடப்பாடி பழனிசாமி , ஓ. பன்னீர் செல்வத்தை நாங்கள் சந்தித்து ஈரோடு இடைத்தேர்தல், தமிழ்நாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தோம். எங்கள் தேசிய பொதுச் செயலாளர் ஜே.பி. நட்டா சார்பாக சில தகவல்களை நான் இருவரிடமும்  எடுத்துக் கூறினேன்.  தமிழ்நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு தி.மு.க. கூட்டணி வேட்பாளரை வீழ்த்துங்கள் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் என இருவரிடமும் கூறினோம்.

அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அப்போது தான் நாம் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த முடியும். ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு குறித்து அறிவிக்க வரும் 7-ம் தேதி வரை அவகாசம் உள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து