முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி சீருடையில் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் : வெறும் 24 நிமிடங்களில் முடிந்தது

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      இந்தியா
Puducherry 2023 01 24

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கூட்டம் வெறும் 24 மிடத்தில் முடிந்தது. சட்டசபைக்கு பள்ளி சீருடை மற்றும் மிதிவண்டியில் வந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பை ஏற்படுத்தினர்.

சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுவை சட்டசபை நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டப்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் சீருடைகளை விரைவில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சைக்கிளில் சட்டசபைக்கு வந்தனர். அவர்கள் பள்ளி மாணவர்கள் போல் புத்தக பையை தோளில் தொங்கவிட்டு வந்தனர். சபை கூடியதும் தி.மு.க. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர். நேற்று தொடங்கிய சட்டசபை கூட்டம் 24 நிமிடத்தில் முடிவடைந்தது. சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார். இதைதொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து