முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 5 நாட்களில் 46 பேர் வேட்புமனு தாக்கல்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      தமிழகம்
Erode 2023 01 31

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 5-வது நாளான நேற்று வரை 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். 

முதல் நாளில் சுயேட்சைகள் பலர் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். முதல் நாளில் 4 சுயேட்சைகள் மனு ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2-வது நாளில்  தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் உள்பட 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து 3-வது நாளாக நடந்த வேட்பு மனு தாக்கலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்பட 10 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம்  4-வது நாளாக வேட்பு மனு தாக்கல் தொடர்ந்து நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அ.ம.மு.க வேட்பாளர் சிவ பிரசாந்த், ஓ.பன்னீர் செல்வம் அணி வேட்பாளர் செந்தில் முருகன் உள்பட ஒரே நாளில் அதிகபட்சமாக 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த 4 நாட்களாக நடந்த வேட்பு மனு தாக்கலில் 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த நிலையில் நேற்று  5-வது நாளாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. நேற்று சில சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் 5 நாட்கள் வேட்புமனு தாக்கல் நிலையில் மோத்தம் 46 பேர் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும். 7-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதன் பின்னர் 8-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 10-ம் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும். ---

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து