முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா : சீனா கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      உலகம்
Balloon-America 2023 02 05

Source: provided

வாஷிங்டன் : அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இதற்கிடையே, அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை கண்டுபிடித்தனர். தகவலறிந்த ராணுவ அதிகாரிகள் அந்த பலூன் எங்கிருந்து வந்தது? எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது பற்றி ஆய்வு செய்தனர். இதில் அந்த பலூன் சீன நாட்டின் தயாரிப்பு என கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், லத்தீன் அமெரிக்கா பகுதியிலும் ஒரு சீன உளவு பலூன் பறந்து வருவதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், மொன்டானாவில் இருந்து தென் கரோலினா வரை வானத்தில் வட்டமிட்ட உளவு பலூன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த போது அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. 

இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், அதிபர் ஜோ பைடனின் வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்க போர் விமானம் தென் கரோலினா கடற்கரையில் உள்ள நீர் மீது சீன மக்கள் குடியரசால் ஏவப்பட்ட உயரமான கண்காணிப்பு பலூனை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது என தெரிவித்தார். 

இந்த நிலையில் அமெரிக்காவால் பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது அதிகப்படியான செயல் மற்றும் சர்வதேச நடைமுறையை மீறிய தீவிர விஷயம் இது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. 

சீனா நிச்சயம் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் நலன்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுக்கும். சட்டப்படி உரிமையை பாதுகாப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும்  சீனா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து