முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் : ஆய்வுக்குப் பின் அமைச்சர் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      தமிழகம்
Chakrabani 2023 02 05

Source: provided

தஞ்சாவூர் : டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று ஆய்வுக்குப் பின் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். 

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 1-ம் தேதி முதல் 3- ம் தேதி வரை பருவம் தவறி பெய்த மழையால், அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை உணவு வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில், கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி  வரை பருவம் தவறி பெய்த திடீர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தது. மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து இருந்த நெல்களும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். 

இதையடுத்து,பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், கொள்முதலில் நெல் ஈரப்பதத்தினை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில், வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.  அப்போது, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் அமைச்சர் சக்கரபாணி கேட்டறிந்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, 

87 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து