Idhayam Matrimony

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்த சண்முகர் : நாளை தேரோட்டம் நடக்கிறது

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      ஆன்மிகம்
Tiruchendur 2024-08-31

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்தார். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய  சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. ஆவணித் திருவிழாவின்  8-ம் நாளான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை  மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில்  பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து சிவன் கோயில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.

பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி பரியேறும் பெருமாள் வகையறா மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு பச்சை சாத்தி கட்டளைதாரர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மல்லிகா, ராமசுப்பிரமணியம் பிள்ளை சார்பில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடந்தது. பகல் 11:30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டு அணிந்து, மரிக்கொழுந்து மாலை அணிந்து விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கண் சாத்தி வழிபட்டனர்.

மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், சுவாமி அலைவாயுகந்தபெருமான் தனித்தனி குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருநெல்வேலி ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி மீண்டும் சிவன் கோயில் சேர்ந்தனர்.  விழாவின் 9-ம் நாளான இரவு 9 மணிக்கு சுவாமி குமரவிடங்பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.  ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை(2-ம் தேதி) காலை 6,30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும், மூன்றாவதாக வள்ளியம்மன் எழுந்தருளிய தேரும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.  

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து