முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்தி.வேகப்பந்து வீச்சாளர் பங்கேற்பதில் சிக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      விளையாட்டு
Australian-team 2023 02 05

Source: provided

நாக்பூர் : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் வரும் 9-ம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. 

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிட்னியில் கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட்டின் இடதுகாலில் காயம் ஏற்பட்டது. 

அந்த காயம் இன்னும் குணமடையாததால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோஷ் ஹேசல்வுட் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விரைவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜோஷ் ஹேசல்வுட் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதில் மாற்று வீரர் யார்? என்பது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து