எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பா.ஜ.க. - ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் 3-வது முறையாக மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதில், டெல்லியில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், 15 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் செல்வாக்கு செலுத்தி வந்த பா.ஜ.க. பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனிடையில், டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா, மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக 10 நியமன உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தால், மேயர் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெரும் விதமாக துணை நிலை ஆளுநர் செயல்படுகிறார் என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது. மேலும், ஆல்டர்மேன் என்று அழைக்கப்படும் இந்த நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று டெல்லி மாமன்றம் கூடியதும் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சத்ய சர்மா நியமன உறுப்பினர்களும், மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். முன்னதாக, இந்த மூன்று தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த கவுன்சிலர் முகேஷ் கோயல் ஆல்டர்மென்கள் வாக்களிக்க முடியாது என்றார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு எதிராக பா.ஜ.க. கவுன்சிலர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால், ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் மாமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மேயர் தேர்தலும் 3-வது முறையாக ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, ஜனவரி 6, 24 ஆகிய இரண்டு நாட்களிலும் இதே போல் நடந்த பா.ஜ.க. - ஆம் ஆத்மி மோதல்களால் இரண்டு முறையையும் புதிய மேயரைத் தேர்வு செய்யாமல் மாமன்றத் தலைவர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


