எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் சண்டை போட்ட அசதியில் தூங்கி, பின்னர் பிரெஷ்ஷாக எழுந்து மீண்டும் கவுன்சிலர்கள் மோதி கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.
டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ந்தேதி நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று, மாநகராட்சியையும் கைப்பற்றியது. எனினும், துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக எழுந்த பிரச்சனையால், தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் மேயரை தேர்வு செய்ய முடியவில்லை.
இந்நிலையில், கடந்த 17-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவை அடுத்து, மேயர் தேர்தலுக்காக மாநகராட்சி கூட்டம் நடத்துவதற்கு துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா ஒப்புதல் வழங்கினார். இதன்படி, டெல்லி குடிமை மையத்தில் நேற்று முன்தினம் காலையில் மாநகராட்சி கூட்டம் கூடி, மேயர் தேர்தல் நடந்தது.இதில் ஆம் ஆத்மி தரப்பில் போட்டியிட்ட ஷெல்லி ஓப்ராய் வெற்றி பெற்றார்.
இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு இருந்ததால் பா.ஜ.க. கவுன்சிலர்கள் தேர்தலை நடத்தவிடமால் அமளி செய்தனர். இதனால் ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த காகிதங்களை சுருட்டியும், தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்தும் ஒருவரை ஒருவர் தாக்கி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், அவை ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. கவுன்சிலர்களின் கோஷங்களுக்கு மத்தியில் மாநகராட்சி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. எனினும், கூட்டத்தில் மீண்டும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. தொடர்ந்து இதுபோன்று அவை ஒத்தி வைக்கப்படுவதும், பின்னர் அவை மீண்டும் கூடுவதும் என 4 முறை நடந்தது. அதன்பின்னர், மாநகராட்சி கூட்டம் மீண்டும் தொடங்கியது. ஆனால், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து கடுமையான சண்டை ஏற்பட்டது. இந்த தொடர் அமளியால் நேற்று முன்தினம் இரவு 5-வது முறையாக அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், டெல்லி மாநகராட்சி அவை ஒரு போர்க்களம் போன்று காட்சியளித்தது.
இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் 2 நாளாக அவையை நடத்த விடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு சண்டை போட்ட அசதியில் அவைக்குள்ளேயே கவுன்சிலர்கள் சிலர் காலை நீட்டி படுத்தபடியும், மேஜையின் முன்புறம் சாய்ந்தபடியும் படுத்து உறங்கினர். இதன்பின்னர், அவை மீண்டும் கூடியதும் பிரெஷ்ஷாக எழுந்து அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை முடக்கினர். மீண்டும் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். இந்த சண்டையில், பிளாஸ்டிக் பாட்டில்கள், ஆப்பிள் பழங்கள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் ஒருவர் மீது மற்றொருவர் வீசி கொண்டனர். நேற்று முன்தினம் காலையில் இருந்து நேற்று காலை வரை நடந்த இந்த மோதல் பின்னர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு: நொடி பொழுதில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்
16 Jul 2025பாட்னா : பாட்னாவில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
காசா: நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு
16 Jul 2025டெல் அவிவ், காசாவில் நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் ஏற்பட்டது. அப்போது 20 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியல்- 4 இந்திய நகரங்களுக்கு இடம்
16 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் தரவரிசையில் 4 நகரங்கள் இடம் பெற்றது.
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசை: ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
16 Jul 2025லண்டன் : ஐ.சி.சி.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்
16 Jul 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
கடலூர் மாவட்டத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Jul 2025சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் நேற்று விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடினார்.
-
அமெரிக்காவில் திடீர் கனமழை
16 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பெய்த கனமழைக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ள பெறுக்கு ஏற்பட்டுள்ளது.
-
தோல்வி குறித்து சிராஜ்
16 Jul 2025லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில்
-
'ஒரணியில் தமிழ்நாடு' திட்டம் மூலம் 1 கோடியே 35 லட்சம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் : கட்சி தலைமை அறிவிப்பு
16 Jul 2025சென்னை : தி.மு.க.வின் ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
மகளிர் டி-20 தரவரிசை: டாப் 10-ல் ஷபாலி வர்மா
16 Jul 2025லண்டன் : மகளிர் டி-20 ஐ.சி.சி.
-
திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு: தமிழக அரசு விளக்கம்
16 Jul 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
16 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.;
-
தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு
16 Jul 2025சென்னை : படத் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைப்பதற்கு தடை
16 Jul 2025சென்னை : கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. கொடி நிறம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
16 Jul 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடி நிறம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்
16 Jul 2025சென்னை : கந்தசாமி கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம் செய்தார்.
-
போர்களை எதிர்கொள்ள தொழில்நுட்பம் தேவை: முப்படை தலைமை தளபதி பேச்சு
16 Jul 2025புதுடில்லி, 'இன்றைய போர்களை எதிர்த்துப் போராட நாளைய தொழில்நுட்பம் தேவை' என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
-
ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கம்
16 Jul 2025மும்பை : ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கமளித்துள்ளது. பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
-
மயிலாடுதுறையில் அரசு விழா: ரூ.113.51 கோடி மதிப்பில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற பணிகள் திறந்து வைத்தார்
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 48 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 113 கோடியே 51 லட
-
ஜார்க்கண்ட்டில் என்கவுன்டர்: 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
16 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலயத்தில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் பாதுகாப்புப்படை வீரர் மரணம் அடைந்தார்.