முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி கோவிலில் கோடை வசந்த உற்சவ விழா வரும் 27-ம் தேதி தொடங்குகிறது

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2023      ஆன்மிகம்
Meenakshi-Temple-2023 03 10

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோடை வசந்த உற்சவ விழா வரும் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக பங்குனி உத்திரம் சாமி புறப்பாடு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சொக்கநாத பெருமானே பல்வேறு அவதாரங்கள் எடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதன புண்ணிய சேத்திரம் ஆகும். அருளாளர் நால்வரால் பாடல் பெற்றது. மூர்த்தி, தலம், விருட்சம் என்ற பெருமை பெற்றது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் நடக்கும் கோடை வசந்த உற்சவ திருவிழா வருகிற 27-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நடக்கிறது. ஏப்ரல் மாதம் 5-ம் தேதி பங்குனி உத்திரம் அன்று காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி செல்லூர் வைகை வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருளுகிறார்கள். அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்படும். 

அதன் பிறகு மாலையில் சுந்தரேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோவிலுக்கு செல்கிறார்கள். சுவாமி சன்னதி, பேச்சி கால் மண்டபத்தில் பாத பிட்சாடனம், தீபாராதனை முடிந்து மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருள்வார்கள். 

அதன் பிறகு அங்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. கோடைகால வசந்த உற்சவ திருவிழா நடக்கும் மேற்கண்ட நாட்களில் மீனாட்சி அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா, திருக்கல்யாணம் நடைபெறாது என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து