முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்கர் வென்ற ' நாட்டு நாட்டு' பாடல்: ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தி உள்ளது: ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து

திங்கட்கிழமை, 13 மார்ச் 2023      சினிமா      இந்தியா
Murmu 2023 01 31

அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த கீரவாணி பெற்றுக் கொண்டனர். நாட்டு நாட்டு பாடலுக்கு மேடையில் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது. கால பைரவா, ராகுல் சிப்லிகஞ்ச் நாட்டு நாட்டு பாடலை பாட, கலைஞர்கள் நடனம் ஆடினர். நாட்டு நாட்டு பாடலுக்கு கலைஞர்கள் ஆடியதற்கு விழாவில் இருந்தவர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.

இதேபோல் நீலகிரி தம்பதியை பற்றிய, கார்த்திக்கி கொன்சல்வேஸ் இயக்கியுள்ள The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதினை கார்த்திக்கி, குனித் மொங்கா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முதுமலையில் உள்ள பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி குறித்த ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2 ஆஸ்கர் விருதுகள்: குடியரசுத் தலைவர் வாழ்த்து

ஆஸ்கர் விருதுகளை வென்ற RRR, The Elephant Whisperers படக்குழுவினருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். ' நாட்டு நாட்டு' பாடல் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தி உள்ளது எனவும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து