முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பஞ்சாப் நடிகருக்கு கத்திக்குத்து மர்ம மனிதன் வெறிச்செயல்

வியாழக்கிழமை, 16 மார்ச் 2023      சினிமா      உலகம்
Aman-Thaliwal 2023 03 16

அமெரிக்காவில் பஞ்சாப் நடிகரை கத்தியால் குத்திய மர்ம நபர் குறித்து  போலீசார் தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர். 

பஞ்சாப் திரை உலகில் பிரபல நடிகராக திகழ்பவர் அமன் தாலிவால். இவர் அமெரிக்கா சென்று இருந்தார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். 

அப்போது மர்ம மனிதன் ஒருவன் கத்தியுடன் உடற்பயிற்சி கூடத்தில் புகுந்தான். அவன் அங்கிருந்தவர்களை மிரட்டினான். திடீரென அவன் நடிகர் அமன் தாலிவாலை சரமாரியாக கத்தியால் குத்தினான். 

இதில் அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நடிகர் அமன் தாலிவால் மீது தாக்குதல் நடத்திய மர்மமனிதன் யார்? . எதற்காக இந்த கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டான் என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

உடற்பயிற்சி கூடத்தில் பஞ்சாப் நடிகர் தாக்கப்பட்ட வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து