முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் என்னை நாளை கைது செய்யவுள்ளனர் : வலைதளத்தில் டிரம்ப் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      உலகம்
Trump 2023 03 05

Source: provided

வாஷிங்டன் : நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் நாளை போலீசார் என்னை கைது செய்யவுள்ளனர்  என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப். குடியரசு கட்சியை சேர்ந்த அவர், வருகிற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்த போது, டிரம்ப் குறித்து பிரபல ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தன்னுடன் டிரம்ப் நெருங்கிய உறவில் இருந்தார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். 

தேர்தலின்போது இந்த தகவல் வெளியானதால் அதுபற்றி ஸ்டோர்மி டேனியல்ஸ் பேசாமல் இருக்க 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பணம், பிரச்சார நிதியில் இருந்து சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் நாளை  21-ம் தேதி கைது செய்யப்பட உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். 

மன்ஹாட்டன் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் இருந்து கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கோள்காட்டி டிரம்ப், தனது சமூக வலைதளத்தில், முன்னணி குடியரசு கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர்  நாளை 21-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்படுவார். போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து