முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. - எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளி: பார்லி., இரு அவைகளும் 7வது நாளாக முடங்கியது

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2023      இந்தியா
Parliament 2023 03 21

பா.ஜ.க. - எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியால் நேற்று பாராளுமன்ற இரு அவைகளும்  7வது நாளாக முடங்கியது.

பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்.பிகளின் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 7வது நாளாக முடங்கியது. நேற்று காலை இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தில் ஈடுப்பட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் 7வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது. அவை தலைவரான துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் அவரது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும் என அனைத்து கட்சிகளின் மாநிலங்களவை குழு தலைவர்களுக்கும் தகவல் அனுப்பினார்.

ஆனால் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என காங்கிரஸ் மற்றும் திமுக அவருக்கு தகவல் தெரிவித்தனர். பிற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை பாரதீய ஜனதா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் பேச்சுவார்த்தை, ஆலோசனை எதுவும் நடைபெறாமல் அந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

அதை தொடர்ந்து 2 மணிக்கு மாநிலங்களவை கூடிய போது சில உறுப்பினர்கள் நாளை (இன்று) உகாதி , நௌரோ உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் விடுமுறை தேவை எனவும் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று கொண்ட அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் (இன்று) நாளை விடுமுறை என அறிவித்தார். இந்நிலையில் உகாதியையொட்டி நாளை (இன்று) விடுமுறை என்பதால் மாநிலங்களவை 23ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவை நடவடிக்கை தொடரலாம் என்று ஆரம்பிக்கும் போது மீண்டும் முழக்கங்கள் எதிர் முழக்கங்கள் என 7வது நாளாக அவை முடங்கின. மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரத்தை எழுப்பி இரு தரப்பும் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

இடைப்பட்ட நேரத்தில் நேற்று எதிர்கட்சிகளை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து போராட்டம் நடத்தினர். மிக பெரிய பேனர் ஒன்றை திறந்து வைத்து அதன் அருகே நின்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அதன் பிறகு அவர்கள் மீண்டும் இரு அவைகளுக்கு சென்றபோது மீண்டும் மோதல் வெடித்தது. ஏற்கனவே கடந்த 6 நாட்களாக விவாதம் எதுவும் நடக்காமல் பாராளுமன்றம் முடங்கியிருந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பி.க்களின் அமளியால் 7வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து