Idhayam Matrimony

நம்மாழ்வார் பெயரில் விருது: பருத்தி உற்பத்தியை அதிகரிக்க 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2023      தமிழகம்
Budget-4 2023 03 21

Source: provided

சென்னை : பருத்தி உற்பத்தியை உயர்த்த ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 நேற்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும்.

இந்த பட்ஜெட்டில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் வருமாறு.,  பருத்தி உற்பத்தியை உயர்த்தும் வகையில் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.5 லட்ச பணமும், பாராட்டு பத்திரமும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

தரிசு நிலங்களை கண்டறிந்து மா, பலா, கொய்யா நட நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு. விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க ஆண்டு கட்டணமாக ரூ. 10,000 மானியத்தொகை அறிவிக்கப்படும். இதற்காக ரூ.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ்ஆப் குழு. வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து