முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலிக்கு வர்த்தக பயணம் மேற்கொண்டார் நடிகர் கமல்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2023      தமிழகம்      வர்த்தகம்
Kamal-2022 12 22

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், உலகம் முழுதும் மேற்கத்திய பாணியிலான கதர் உடைகளை அறிமுகப்படுத்தும் பேஷன் ஷோவில் பங்கேற்க, இத்தாலிக்கு வர்த்தக பயணம் மேற்கொண்டுள்ளார்.

அரசியல், சினிமா என, இரட்டை குதிரையில் சவாரி செய்யும் கமல் 'கமல்ஹாசன் ஹவுஸ் ஆப் கதர்' என்கிற நிறுவனத்தின் வாயிலாக கதர் ஆடை விற்பனையை ஆரம்பித்துள்ளார். குறிப்பாக, நெசவுத்தொழில் மேம்படைய கதர் ஆடைகள் தயாரிப்பிற்கு, கமல் முக்கியத்துவம் அளித்துள்ளார். கதரை உலகம் முழுதும் அறிமுகப்படுத்தும் முயற்சியாக, மேற்கத்திய பாணியிலான உடை மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளை தன் நிறுவனத்தின் வாயிலாக விற்பனை செய்து வருகிறார்.

தற்போது 'ஹாலிவுட்' நடிகர், நடிகைகளும் கதர் உடைகளை அணிய வேண்டும் என்பதற்காக, சர்வதேச பேஷன் ஷோவில் பங்கேற்க, கமல் இத்தாலிக்கு கடந்த, 11ம்தேதி திடீரென புறப்பட்டு சென்றார். அவர் அங்கு தன் நிறுவனத்தின் வர்த்தக நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, வரும், 25ம்தேதி பின் இந்தியா திரும்புகிறார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து