எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 நேற்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும். பச்சைத் துண்டு அணிந்துவந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும். காவிரி டெல்டாவில் ரூ.1000 கோடி செலவில் வேளாண் தொழில் பெருந்தடம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வேளாண் பட்ஜெட்டின் 11 முக்கிய அறிவிப்புகள்:
1. தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்; சிறுதானிய திருவிழாக்கள்:
2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இயக்கத்தில், வரும் ஆண்டில், தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்தும், மாற்றுப் பயிர் சாகுபடி மூலமாகவும் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும், சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிப்பதற்கும். 12,500 ஏக்கரில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கவும் மானியம் அளிக்கப்படும். வரும் ஆண்டில், ஒன்றிய, மாநில அரசு நிதி உதவியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
சிறுதானிய உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் முக்கிய சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். அரசு நிறுவனங்கள், கல்வி நிலைய விடுதிகளில், சத்துள்ள சிறுதானிய உணவு அளிக்கப்படும்.
2. நம்மாழ்வார் விருது; பரிசு ரூ.5 லட்சம்:
ஆரோக்கியத்திற்கு வழங்குவது இன்றியமையாதது. நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையைப் பெருமளவில் ஊக்குவிக்க ஒரு சிறப்புத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வேதியியல் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், அங்கக வேளாண் சாகுபடி முறைகளை அறிமுகப்படுத்துதல், மண்புழு உரம், பஞ்சகவ்யம், தசகவ்யம் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குதல், சாகுபடி மானியம் வழங்குதல், அங்ககச் சான்று பெற பதிவு செய்தல், அங்கக விளைபொருட்களுக்கு அங்காடிகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வரும் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அங்கக வேளாண்மையில் திரு நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் ”நம்மாழ்வார்’ பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருது ஐந்து இலட்சம் ரூபாய் பணப்பரிசு, பாராட்டுப் பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
3. பருத்தி இயக்கம்:
நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்து வழங்கிடும் நோக்கத்துடன், தொடர்ந்து பருத்திப் பயிரின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், இவ்வரசு, “நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினைச்” செயல்படுத்தி வருகிறது. வரும் ஆண்டிலும் பருத்தி உற்பத்தியை 4 இலட்சத்து 52 ஆயிரம் பேல்களாக உயர்த்தும் வகையில், 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
4.மதுரை மல்லிகைக்கு ஓர் இயக்கம்:
மதுரைக்கும் மல்லிகைக்குமான தொடர்பு, இன்று நேற்றல்ல. சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. எனவே மல்லிகைக்குப் புகழ்பெற்ற மதுரையை மையமாக வைத்து ஒரு தொகுப்பு ஏற்படுத்துவது மிகவும் உகந்ததாகும். மல்லிகை மதுரையில் மட்டுமின்றி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4,300 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இத்தொகுப்பில் மல்லிகை உற்பத்தியை மேம்படுத்துவதோடு, சந்தை வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும்.
5. மிளகாய் மண்டலம்:
மிளகாய், தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது. இப்பரப்பை 40,000 எக்டராக உயர்த்தி, உற்பத்தியினை அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும். இப்பகுதியில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்கவும், சேமித்து வைத்து சந்தைப்படுத்தவும், மதிப்புக்கூட்டுதலுக்கும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். நீர் ஆதாரம் இல்லாத இடங்களில் பண்ணைக் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு நுண்ணீர்ப் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
6. கறிவேப்பிலைத் தொகுப்பு:
உணவுக்கு மணமூட்டும் கறிவேப்பிலை, தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு கறிவேப்பிலைக்கு என ஒரு தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு, உரிய பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து, பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைத்து, அதிகளவில் அங்கக இடுபொருட்களைப் பயன்படுத்தி, சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளில் 1,500 எக்டர் பரப்பில் கறிவேப்பிலைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில், 100 எக்டரில் செங்காம்பு இரக கறிவேப்பிலை பயிரிட தரமான நடவுச்செடிகள், நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் வழங்கப்படும். உலர் கறிவேப்பிலை, கறிவேப்பிலைத்தூள், பேஸ்ட் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படும்.
7. புவிசார் குறியீடு:
தமிழ்நாட்டுக்கே உரிய வேளாண் பொருட்கள் எண்ணற்றவை இருக்கின்றன. ஒரு மாவட்டத்தில் விளைகிற மாதிரி, மற்றொரு மாவட்டத்தில் அவை விளைவது இல்லை. அத்தகைய சிறப்பு வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று உலகளாவிய சந்தையில் இடம்பெறச் செய்வதன்மூலம் அவற்றின் மதிப்பு அதிகரிக்கிறது. கடந்த ஆண்டில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, வரும் ஆண்டிலும், கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புகவுணி அரிசி ஆகிய பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
8. தொன்மை சார் உணவகங்கள்:
உழவர் சந்தைக்கு அதிகாலையிலேயே உழவர்கள் காய்கறி மூட்டையோடும், கீரைக் கட்டோடும் வந்து விடுகிறார்கள். மதியம் வரை அவர்கள் தங்கள் காய்கறிகளையும், பழங்களையும் விற்பனை செய்து களைத்துப் போகிறார்கள். அவர்கள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளும் வகையிலும், வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வகையிலும் தமிழ்நாட்டுக்கே உரிய தொன்மை மிக்க ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியக் கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கவும், வருகிற நுகர்வோர்கள் அவற்றை அருந்தி, விழிப்புணர்வு பெறவும், முதல் கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.
9. சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe):
வரும் ஆண்டில், சிறுதானியப் பயிர்கள் சாகுபடி, மதிப்புக்கூட்டுதல், பயன்பாட்டினை அதிகரிக்கும் வகையில், சுய உதவி குழு உறுப்பினர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் 40 சிறுதானிய தொகுப்புகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி தந்து ஊக்குவிப்பதற்காக, அரசு 40 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கும். மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ’மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe) உருவாக்கப்படும்.
10. வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து ஆராய்ந்து தீர்வு காண தனிக்குழு:
தற்போது, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், யானை, காட்டுப் பன்றி, மான், போன்ற வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பது என்பது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, இத்தகைய வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பது, சட்டவிதிகளுக்கு உட்பட்டு, வனத்துறை மூலம் அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆராய்வதற்கு கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் (வனவிலங்குகள்) தலைமையில் தனிக்குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவில், வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களும், விவசாயிகளும் இடம்பெறுவார்கள். இக்குழு, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, விவசாயிகளைச் சந்தித்து, சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்து, இதற்கான தீர்வு குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.
11.காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள்:
சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் திருச்சி-நாகப்பட்டினத்திற்கு இடைப்பட்ட பகுதி வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிக்கப்பட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில், உழவர்களுக்கு அதிக வருமானம் ஈட்டவும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வேளாண் தொழில் பெருந்தடத்தினை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேளாண் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளைத் தொடங்க முன் வரும் தொழில் முனைவோருக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகுப்பும், சந்தை இணைப்புகள், வல்லுனரின் வழிகாட்டுதல்கள், ஒற்றைச் சாளர முறை வசதிகள் உருவாக்கித் தரப்படும். சேமிப்பு, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதலை திறம்பட மேற்கொள்ளும் வகையில். பொது வசதிகளுடன் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.
காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில்களை வளர்ப்பதற்காக தஞ்சாவூரில் புதிய வட்டார புத்தொழில் மையம் ஒன்று தமிழ்நாடு புத்தொழில்-புத்தாக்க இயக்கம் மூலம் உருவாக்கப்படும். இந்த வேளாண் தொழில் பெருவழி தடத்தின் மூலம் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்துத் திறம்பட செயல்படுத்தும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் தொழில் பெருந்தட திட்டம் செயல்படுத்தப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் பாரதி
12 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
12 May 2025முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரியில் உற்சாக வரவேற்பு
12 May 2025ஊட்டி : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
-
ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
12 May 2025சென்னை : தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 May 2025சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாட்டின் பாதுகாப்பிற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு: இஸ்ரோ
12 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
நட்புக்காக விழாவில் பங்கேற்ற சிம்பு
12 May 2025“DD நெக்ஸ்ட் லெவல்” பட விழாவில் நடிகர் சிம்பு.
-
சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது
12 May 2025சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
12 May 2025சென்னை : பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளத
-
'தொடரும்’ திரை விமர்சனம்
12 May 2025பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
-
‘மையல்’ இசை வெளியீடு
12 May 2025ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’.
-
எல்லை பகுதிகளில் தனிந்த போர் பதற்றம்: 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம்
12 May 2025புதுடெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப்
-
ஜோரா கைய தட்டுங்க’ டிரெய்லர் வெளியீடு
12 May 2025நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், 'ஜோரா கைய தட்டுங்க'மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்திய படம்
-
'கஜானா ' திரை விமர்சனம்
12 May 2025அடர்ந்த காட்டு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்ல
-
'நிழற்குடை' திரை விமர்சனம்
12 May 2025அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழும் விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 May 2025- மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேச வாகனத்திலும், தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் கருடாரூடராய் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அருளுதல்.
-
இன்றைய ராசிபலன்
12 May 2025 -
இன்றைய நாள் எப்படி?
12 May 2025