முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டி அக்.5 முதல் நவ.19 வரை நடக்கிறது

புதன்கிழமை, 22 மார்ச் 2023      விளையாட்டு
World-Cup 2023 03 22

Source: provided

மும்பை : இந்தியாவில் முழுக்க நடைபெறும் 2023 ஐ.சி.சி. 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெறலாம் என்று தெரிகிறது. இந்த உலகக் கோப்பையில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக 11 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதிப் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடைபெறுகின்றது.

46 நாட்களில்... 

மேலும், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சலா, குவஹாட்டி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை மைதானங்களில் நடைபெறலாம் என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தகவல்கள் தெரிவிக்கின்றன. 46 நாட்களில் 3 நாக் அவுட் போட்டிகளுடன் 48 போட்டிகள் மொத்தமாக நடைபெறவிருக்கின்றன.

இறுதிப்போட்டி... 

இறுதிப் போட்டி தவிர மீதி போட்டிகள் எந்தெந்த மைதானத்தில் என்பதை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை. பருவ மழை காரணமாக போட்டிகள் நடைபெறும் மைதானங்களை முடிவு செய்வதில் தாமதமாகியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் பருவ மழை தொடங்குகின்றது; முடிவடைகின்றது. எனவே இந்தச் சிக்கல்களினால் மைதானங்களை இறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது.

ஐ.சி.சி. அட்டவணை...

பொதுவாக இந்நேரத்திற்கு ஐ.சி.சி. போட்டி அட்டவணையை அறிவித்திருக்கும். ஆனால் இம்முறை பிசிசிஐ அரசிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெறக் காத்திருக்கிறது. இரண்டு முக்கிய விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. முதல் முக்கிய விஷயம் ஒட்டுமொத்த உலகக்கோப்பைத் தொடருக்கும் வரிவிலக்குக் கோருவதாகும். பாகிஸ்தான் அணி இங்கு வர விசா அனுமதிகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

ஒளிபரப்பு வருவாய்... 

ஐ.சி.சி.யுடனான ஒப்பந்தங்களின் படி ஐ.சி.சி. மற்றும் அதன் வர்த்தகக் கூட்டாளிகளுக்கு பிசிசிஐ வரிவிலக்கு பெற்றுத்தர வேண்டும். 2023 உலகக்கோப்பை ஒளிபரப்பு வருவாயில் 20% வரி விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு வரி ஆணையம் ஐ.சி.சி.யிடம் தெரிவித்திருந்தது. ஐ.சி.சி.யின் ஒளிபரப்பு வருவாய் 2023 உலகக் கோப்பை மூலம் 533.29 மில்லியன் டாலர்கள் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் 116.47 மில்லியன் டாலர்கள் வரிவிதிப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து