எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சூரத்: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அதற்குள் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
முன்னதாக, காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி மீது, சூரத்தின் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?" என்று பேசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
நான்காண்டுகள் பழமையான இந்த அவதூறு வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கடந்த வாரத்தில் கேட்டு முடித்திருந்த தலைமை நீதித்துறை நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா, தீர்ப்பை நேற்று (மார்ச் 23 ஆம் தேதிக்கு) ஒத்திவைத்திருந்தார். நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இதற்காக ராகுல் காந்தி காலையிலேயே சூரத் நகரத்திற்கு வந்திருந்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இதற்கு முன்பு, தன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499, 500 கீழ் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது, அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பூர்னேஷ் மோடி, ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டார் என்று அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீர்ப்புக்கு பின்னர் அதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது மதம், அகிம்சையே அதனை அடைவதற்கான பாதை" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வரோதா,"பயந்து போன அனைத்து அரசு எந்திரங்களும், தண்டனை, பாரபட்சம் போன்றவைகளைத் திணிப்பதன் மூலம் ராகுல் காந்தியின் குரலை நசுக்கப் பார்க்கின்றன. எனது சகோதரன் ஒரு போதும் பயப்பட மாட்டான். அவன் உண்மையைப் பேசி வாழ்பவன், தொடர்ந்து உண்மையை மட்டுமே பேசுவான். அவன் தொடர்ந்து இந்த நாட்டு மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டே இருப்பான். உண்மையின் சக்தியும், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் அன்பும் அவனுடன் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மட்டர் பன்னீர் மசாலா12 hours 1 min ago |
கோபி மஞ்சூரியன்![]() 3 days 11 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 1 week 11 hours ago |
-
திரும்பிய பக்கமெல்லாம் ரத்தம், சடலங்கள்: ஒடிசா ரயில் விபத்து குறித்து உயிர் பிழைத்தவர் வேதனை
03 Jun 2023புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்து குறித்து அந்த விபத்தில் இருந்து தப்பிய நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விபத்து குறித்த வேதனையை பகிர்ந்துள்ளார்.
-
நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடிய உக்ரைன் ராணுவ வீரர்கள்
03 Jun 2023கீவ் : உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 03-06-2023
03 Jun 2023 -
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு : மருத்துவத்துறை செயலாளர் பேட்டி
03 Jun 2023சென்னை : ஒடிசா விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மருத்துவத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள
-
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஒடிசா ரயில் விபத்து: சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் : காயமடைந்தோரை சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தார்
03 Jun 2023பாலசோர் : ஒடிசாவில் ரயில் விபத்து நேரிட்ட பகுதிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
-
ஒடிசா ரயில் விபத்து: உலக தலைவர்கள் இரங்கல்
03 Jun 2023டோக்கியோ : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: மத்திய அமைச்சர் பதவி விலக கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
03 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவி விலக வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.
-
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து: சிறப்பு ரயில்கள் மூலம் இன்று 383 பேர் சென்னை வருகை
03 Jun 2023சென்னை : ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தை தொடர்ந்து சிறப்பு ரயில்கள் மூலம் 383 பேர் இன்று சென்னை வந்தடைகின்றனர்.
-
ரயில்வே என் குழந்தை போன்றது; ஆலோசனைகளை வழங்கத் தயார் : ஒடிசா ரயில் விபத்து பகுதியில் மம்தா பேட்டி
03 Jun 2023புவனேஸ்வர் : "ரயில்வே என் குழந்தையைப் போன்றது.
-
ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது : ரஷ்ய அதிபர் புடின் இரங்கல்
03 Jun 2023டோக்கியோ : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா ரயில் விபத்து காரணமாக 11 ரயில்கள் ரத்து: ரயில்வே அறிவிப்பு
03 Jun 2023சென்னை : ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து காரணமாக சென்னை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் உள்பட 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அறிவித்துள்
-
சென்னை வரும் பயணிகளுக்கு உதவ சென்ட்ரல், விமான நிலையத்தில் காவல் துறை சார்பில் ஏற்பாடுகள்
03 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, சென்னை வரும் பயணிகளுக்கு உதவவும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவவும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள்
-
ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் : மத்திய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்
03 Jun 2023சென்னை : ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ஒடிஷா ரயில் விபத்து குறித்து அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவு : குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை: பிரதமர் மோடி
03 Jun 2023புவனேஷ்வர் : ஒடிஷா ரயில் விபத்து குறித்து அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படு
-
பலி எண்ணிக்கை 288: ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவு: சீரமைப்பு பணி தொடக்கம்
03 Jun 2023புவனேஸ்வர் : தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து
-
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தது தி.மு.க.
03 Jun 2023புவனேஷ்வர் : ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தி.மு.க. தலைமை கழகம் நேற்று அறிவித்தது.
-
ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது : பாக். பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரங்கல்
03 Jun 2023இஸ்லாமாபாத் : ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசாவில் ஒரே கிழமையில், ஒரே நேரத்தில் 2 முறை விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
03 Jun 2023பாலசோர் : ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரே கிழமையில், ஒரே நேரத்தில், 2 முறை விபத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.
-
'நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி' - கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
03 Jun 2023சென்னை : நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கருணாநிதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வானார் : முதன்மைச்செயலாளராக துரை வைகோ தேர்வு
03 Jun 2023சென்னை : ம.தி.மு.க. பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் வைகோ தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சியின் முதன்மைச் செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார்.
-
127 கி.மீ. வேகத்தில் மாற்று தண்டவாளத்தில் சென்றதா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்? - விபத்து குறித்த அதிர்ச்சி தகவல்கள்
03 Jun 2023புவனேஷ்வர் : சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 127 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
-
ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
03 Jun 2023சென்னை : ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து பயணித்த 1,257 பேர்
03 Jun 2023புவனேஸ்வர் : விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் 2296 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளதாகவும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தத
-
ஒடிசா ரயில் விபத்து காட்சிகள் நினைவை விட்டு அகலாது : உயிர் தப்பிய பயணிகள் அதிர்ச்சி பேட்டி
03 Jun 2023புவனேஸ்வர் : ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.