முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் ஷ்ரேயாஸ்?

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      விளையாட்டு
23-Ram-58-1

Source: provided

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைக்கான  இந்திய அணியின் திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர். பார்டர் கவாஸ்கர் கோப்பையின் போது முதுகுவலியால் பாதிக்கப்பட்ட அவர், பாதியிலேயே வெளியேறினார். மேலும் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகினார். இதனையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதுகுவலி பிரச்சினைக்காக லண்டன் புறப்படவுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைந்து பழைய ஃபார்முக்கு வருவதற்கு குறைந்தது 4 - 5 மாதங்கள் வரை ஆகும் எனக்கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.

________________

ஆசியாவில் 10,000 ரன்களை 

கடந்த வீரர்: ரோகித் சாதனை 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. விராட் கோலி அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார். 

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.இந்தப் போட்டியில், ரோகித் சர்மா 17 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆசியாவில் 10,000 ரன்களை கடந்த 8-வது இந்தியர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.

________________

பிராவோவுக்கு விசில் அடிக்க 

கற்றுக்கொடுத்த தல டோனி

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் அணி வீரர்களின் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியீட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நம்ம ஊரு சென்னைக்கு விசில் போடுங்க பாடலுக்கு அணியின் கேப்டனான எம்எஸ் டோனி பந்து வீச்சு பயிற்சியாளரான பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

________________

மின்னல் வேகத்தில் 

ஸ்டம்புகளை தகர்த்த டோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத வெற்றிகளில் ஒன்றுதான் கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டி. அந்தப் போட்டியின் கடைசி பந்தில் மின்னல் வேகத்தில் சூப்பர் பவர் பெற்ற மின்னல் முரளி போல செயல்பட்டு ஸ்டம்புகளை தகர்த்திருப்பார் டோனி. அதன் மூலம் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் அசாத்திய வெற்றியை பெற்றிருக்கும். அந்தப் போட்டி 2016 மார்ச் 23-ல் நடைபெற்றிருந்தது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருக்கும். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டும். 19 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருக்கும். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் டோனி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்திருந்தார்.

________________

ஒருநாள் தரவரிசை பட்டியல்:

இந்திய அணிக்கு சறுக்கல்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது ஒருநாள் போட்டியை வென்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இதற்கிடையே, 3-வது ஒருநாள் போட்டி தொடங்கும் முன், ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதால் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 113.286 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 112.638 புள்ளிகள் பெற்று இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் நியூசிலாந்து நீடிக்கிறது.

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 weeks 20 hours ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 20 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 3 weeks ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 3 weeks ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 3 weeks ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து