எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டுகள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று (25-ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.ராஜா வரவேற்று பேசுகிறார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை தாங்கி மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி தொடக்கவுரை ஆற்றுகிறார். பின்னர் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்ஸ் கோர்ட்டுகளை மதுரையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகிறார். மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜு தொடங்கி வைத்து பேசுகிறார். பின்னர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ராம சுப்பிரமணியன், எம்.எம். சுந்தரேஷ், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சென்னை, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறுகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை கோர்ட்டு கூடுதல் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அவரை கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், விழா நடைபெறும் மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்துக்கு காரில் செல்கிறார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. இதில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு மதுரை சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
முதல்வரின் வருகையை முன்னிட்டு மதுரை நகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மதுரை மாவட்ட கோர்ட்டில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


