முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      உலகம்
child-pornography 2023 03 2

Source: provided

வாஷிங்டன் : குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததற்காக இந்தியருக்கு 15 வருடம் 8 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. 

அமெரிக்காவில் சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் இந்தியாவை சேர்ந்த ஏஞ்சலோ விக்டர் பெர்னாண்டஸ் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் பயணித்த ஒரு பயணிக்கு செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் அந்த பயணியிடம் குழந்தைகளுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள தான் ஏற்பாடு செய்வதாகவும் விக்டர் கூறியுள்ளார். இது தொடர்பான புகாரில் விக்டர் மற்றும் அந்த பயணி கைது செய்யப்பட்டு அமெரிக்காவின் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இதன் தீர்ப்பு வெளியானது. இதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததற்காக விக்டருக்கு 15 வருடம் 8 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து