எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்சி : திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் ரவிசங்கர் வசித்து வந்தார். இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்து விளையாடி அந்த விளையாட்டுக்கு அடிமையாகியும் உள்ளார். ரவிசங்கர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில் பெருமளவு பணத்தை இழந்துள்ளார்.
இதனால் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரவிசங்கர் மனைவி ராஜலட்சுமி காலை அவரை எழுப்பிய போது எழவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து உடனடியாக ரவிசங்கரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு ரவிசங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் ரவிசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்ட ரவிசங்கரின் மனைவி அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து ராஜலட்சுமி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி ரவிசங்கர் தற்கொலை செய்து கொண்டதால் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே ஆன்லைன் ரம்மியால் 41 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


