முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏப். 19-ம் தேதி முதல் வாகனங்களை நிறுத்த பயண அட்டை கட்டாயம்

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
metro-train 2023-03-01

Source: provided

சென்னை : மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதி என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப். 19 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையானது மிகவும் திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப்புழக்கத்தை குறைக்க வேண்டிய தேவைக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் வாகன நிறுத்தும் இடங்களில் வேகமாக நுழைவது, வெளியேறுவது, பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை, பணமில்லா பரிவர்த்தனைகள் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

பயணிகள் மெட்ரோ ரயில் பயண அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், வாகன நிறுத்தும் இடத்திலும் பெற்றுக் கொள்ளலாம். வாகன நிறுத்தும் இடத்துக்கான அனுமதி பயண அட்டைகளுடன் மட்டுமே இந்த பயண அட்டை கிடைக்கும். 

இந்த நடைமுறை அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ம் தேதி அமலுக்கு வர உள்ளது. எனவே அனைத்து பயணிகளும் மெட்ரோ ரயில் பயண அட்டைகளை விரைவாக பெற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து