முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களை தொடங்க முடியவில்லை:ஜெலன்ஸ்கி

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      உலகம்
Jelensky-2023 03 09

Source: provided

கீவ் : ஆயுதங்கள் பற்றாக்குறையால் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதலை தொடங்க முடியவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய போர் தொடுத்து வருகிறது. அதே வேளையில் நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் ஓர் ஆண்டாக ரஷ்ய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது.

 ரஷ்ய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற தீவிரம்காட்டி வரும் நிலையில் அங்கு இருநாட்டு ராணுவத்துக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதனிடையே ரஷ்யாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராகி வருவதாகவும், அதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. 

இந்த நிலையில் ஆயுதங்கள் பற்றாக்குறையால் ரஷ்யாவுக்கு எதிராக எதிர் தாக்குதலை தொடங்க முடியவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 

எங்களால் இன்னும் தாக்குதலை தொடங்க முடியவில்லை. பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் இல்லாமல் எங்கள் துணிச்சலான வீரர்களை முன் வரிசைக்கு அனுப்ப முடியாது என கூறினார். 

மேலும் நட்பு நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை பெற காத்திருப்பதாகவும், நாட்டின் கிழக்கு பகுதியில் நிலைமை சாதகமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து