முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா மீதான பிடிவாரண்டை தளர்த்தியது செங்கல்பட்டு நீதிமன்றம்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2023      சினிமா
Yashika 2023-03-23

Source: provided

செங்கல்பட்டு : விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா செங்கல்பட்டு ஒருங்கிணைத்த நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவர் மீதான பிடிவாரண்டை தளர்த்தி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது கார் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று சில மாதங்களுக்கு பிறகு வீடும் திரும்பினார்.

இந்த விபத்து தொடர்பாக மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து இவ்வழக்கு விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் மார்ச் மாதம் 22ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அவர் ஆஜர் ஆகவில்லை.  எனவே கடந்த மார்ச் 23ம் தேதி யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் யாஷிகா ஆஜரானார். பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி அவர் ஆஜர் ஆகியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆஜரானதையடுத்து யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்டை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து