முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      தமிழகம்
EVKS 2023-03-16

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக, சில வாரங்களுக்கு முன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடும் மூச்சு திணறலும் ஏற்பட்டது. 

இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று சரியான நிலையில், சில நாட்களுக்கு முன் சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். கொரோனாவில் இருந்து அவர் மீண்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து இளங்கோவனுக்கு கடந்த 26-ம் தேதி மீண்டும் மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஐ.சி.யு. பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் நுரையீரல் தொற்று மற்றும் இருதய செயலிழப்பில் இருந்து குணமடைந்து வருவதாகவும், ஐ.சி.யூ. பிரிவில் இளங்கோவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து