முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி: படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      உலகம்
Canada 2023 04 01

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த போது படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், கனடா எல்லை வழியாக இந்தியா மற்றும் ரோமானியா நாடுகளைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் 7 பேர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர். 

கனடாவில் இருந்து செயிண்ட் லாரன்ஸ் ஆறு வழியாக படகில் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். 

இந்த சம்பவத்தில் இந்திய குடும்பத்தினர் உள்பட 6 பேரும் உயிரிழந்தனர். ஒரு குழந்தை மாயமாகியுள்ளது. அந்தக் குழந்தையை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 4 days 12 hours ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 3 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 3 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து