எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, போக்குவரத்துத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அதாவது, போக்குவரத்து பணியாளர்கள் தேர்வுக்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெறுவதற்காக, தகவல்தொழில்நுட்பத் துறை உதவியுடன் புதிய சாப்ட்வேர் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைய 3 அல்லது 4 மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், போக்குவரத்து கழக கோட்ட தலைமை அலுவலகத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு எடுப்பதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முடிக்கப்படாத, 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை, தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, முடிக்கப்பட்டுள்ளது. சீனியர், ஜூனியர் என்கிற பாகுபாடு இல்லாமல், ஒரே சம்பள விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் புதிதாக 2,000 பேருந்துகள் வாங்க டெண்டர் பணிகள் நடந்து வருகிறது. புதிய பேருந்துகள் வாங்கப்பட்டதும், நவக்கிரக கோயில்களை இணைக்கும் வகையில், பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்கள் சிலர், முறையாக விடுப்பு எடுக்காமல், தொடர் விடுமுறையில் சென்று விடுகிறார்கள். முறையான தகவல் இல்லாத சூழலில், பேருந்துகளை இயக்குவதில் சிரமம் உள்ளது. எனவே, அதைப் பூர்த்தி செய்ய அவுட்சோர்சிங் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் நிலை உள்ளது.
தற்போது பணியாளர்கள் தேர்வுக்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெறுவதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறை உதவியுடன் புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைய 3 அல்லது 4 மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


