முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகமான விலைக்கு பால் கொள்முதல் செய்யவில்லை அமுல் நிறுவனம் விளக்கம்

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்
Milk 2023-05-2

Source: provided

சென்னை: ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது என்றும், ஆவினுக்கு எதிராக போட்டியிடவில்லை என்றும்  அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இந்தநிலையில், அமுல் நிறுவன ஒப்பந்ததாரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது. அமுலுக்கு பால் வழங்க வேண்டும் எனில் ஆவினிடமிருந்து என் ஓ சி சான்றிதழ் பெற விதிகள் உள்ளன.

ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு நிர்ணயித்த கொள்முதல் விலையே தாங்களும் நிர்ணயித்திருக்கிறோம். ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக் கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது. விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் முறைந்த விலைக்கே பால் கொள்முதல் செய்கின்றன.ஆவின் நிறுவன பால் முகவர்களிடம் அமுல் நிறுவனத்திற்கு பால் வழங்க வேண்டும் என பேச்சு நடத்தவில்லை.

கொள்முதல் விலையாக ஆவின் என்ன விலையை நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கே நாங்களும் கொள்முதல் செய்துள்ளோம். விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் குறைந்தே விலைக்கே பால் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகளின் பாதிப்பை தடுக்கவே அமுல் செயல்படும், ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து