Idhayam Matrimony

நடுவரிடம் வாக்குவாதம் விவகாரம்: ஐ.பி.எல். இறுதி போட்டியில் விளையாட டோனிக்கு தடையா?

வியாழக்கிழமை, 25 மே 2023      விளையாட்டு
25-Ram-51

Source: provided

புதுடெல்லி: ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாட டோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தகுதிச் சுற்று 1-ன் போது அவர் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார் என கூறப்படுகிறது.

சென்னை வெற்றி...

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தநிலையில், குஜராத் அணி - சென்னை அணி இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று ஆட்டக்காரராக வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சேர்க்கப்பட்டார். அவர் ஒரு கட்டத்தில் மைதானத்தை விட்டு வெளியேறி 9 நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார். 

டோனி வாக்குவாதம்...

அவரை பந்துவீச கேப்டன் டோனி அழைத்த போது, நடுவர் தடுத்து நிறுத்தினார். இப்போது தான் அவர் களத்திற்கு வந்திருக்கிறார். எனவே உடனடியாக அவரை பந்து வீச அனுமதிக்க முடியாது என்று நடுவர் கூறினார். இதனால் அதிருப்திக்குள்ளான டோனி மற்றும் சக வீரர்கள் நடுவரிடம் சில நிமிடங்கள் வாதிட்டனர். பிறகு நடுவரின் சம்மதத்துடன் அந்த ஓவரை பதிரானா வீசினார்.

டோனிக்கு தடை..? 

இந்த காரசார விவாதங்கள் நடந்து முடிய எட்டு நிமிடங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது, பின்பு பதிரானா பந்து வீச அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அம்பயர்கள் டோனி மீது குற்றம் சாட்டினால் அவர் இறுதி போட்டியில் விளையாடாமல் போவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி...

ஏற்கனவே ஒருமுறை மெதுவாக பந்து வீசியதற்கு நடத்தை நெறிமுறைக்காக அபராதம் டோனிக்கு விதிக்கப்பட்டது. இப்போது வரும் மே 28-ம் தேதி நடைபெறும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.  பிசிசிஐ யின் விதியின்படி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அடுத்த போட்டியின் விளையாட மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து