எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, புதிய பாராளுமன்றத்தை பிரதமர் திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கலான மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சென்டிரல் விஸ்டா என்ற திட்டத்தின் கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதனையடுத்து இதனை பிரதமர் மோடி நாளை 28-ம் தேதி திறந்து வைக்கிறார். பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.
இதற்கிடையே பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த வக்கீல் ஜெய் சுகின் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில், அரசியலமைப்பு சட்டம் 79-வது பிரிவில் பாராளுமன்றம் என்பது ஜனாதிபதியையும் இரு அவைகளையும் கொண்டது என குறிப்பிடப்பட்டு உள்ளது. நாட்டின் முதல் குடிமகனாக உள்ள ஜனாதிபதியே பாராளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர். பிரதமரையும், அமைச்சர்களையும் நியமிப்பதுடன், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பெயரிலேயே எடுக்கப்படுகின்றன. இதுபோன்ற சூழலில் புதிய பாராளுமன்றத்தை திறப்பதற்கு அவருக்கு அழைப்பு விடுக்காதது, ஜனாதிபதியின் மதிப்பை குறைப்பது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தையும் மீறுவதாக உள்ளது.
இந்த விவகாரத்தில் மக்களவை செயலாளரின் அழைப்பிதழ் தன்னிச்சையானது. எனவே புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி முர்முவை கொண்டு திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த மனுவை விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


