முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் காட்சியை வெளியிட்டது மத்திய அரசு

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற புதிய கட்டிடம் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் அதன் காட்சியை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் பாராளுமன்றமும் ஒன்று. தற்போது இருக்கும் பாராளுமன்றம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் தற்போது உள்ள பாராளுமன்ற கட்டிடத்தை விட 17 ஆயிரம் சதுர மீட்டர் பெரிதாக புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி, நாளை 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால்  அது திறந்து வைக்கப்பட உள்ளது. இதனை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள்  அறிவித்திருக்கின்றன.

இச்சூழலில் பாராளுமன்றத்தில் புதிய கட்டிடத்தின் புதிய காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு மூன்று வாயில்கள் உள்ளன. டெல்லியில் எந்த ஒரு புதிய அரசு கட்டிடமும் இந்தியா கேட்டை விட உயரமாக இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் இந்த பாராளுமன்ற கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது நான்கு தளங்களை கொண்டதாக இருக்கிறது. இதில் மக்களவையும்,  மாநிலங்களவையும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருக்கின்றன.

971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. 1272 உறுப்பினர்கள் வரையில் அமரும் விதமாக இந்த பாராளுமன்றத்தில் புதிய கட்டிடம் அமைந்திருக்கிறது. மக்களவையில் 888 பேர் வரை அமரலாம். மாநிலங்களவையில் 384 பேர் வரை அமரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் கூடியதாக இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் புதிய காட்சிகளை தற்போது  மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

இந்த பாராளுமன்றத்தின் தூண்கள், சுவர்கள் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் கலாச்சாரம், பொருளாதாரம், கலை மற்றும் கட்டுமான நுணுக்கங்களுடன் மேற்கொள்ள இருப்பதாக ஆரம்பத்திலேயே தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பாராளுமன்றத்தின் காட்சிகள் வெளியாகி உள்ளன. காத்திருப்பறை, ஆலோசனை அறை, பிரதமரின் அறை  , ஓய்வறை என்று பல பகுதிகளில் பிரிக்கப்பட்டிருக்கின்றன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து