முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோழர் செங்கோல் குறித்து இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் பிரதமர் மோடிக்கு நன்றி

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்
Cenkol 2023-05-26

Source: provided

சென்னை : புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழா குறித்தும், நாடாளுமன்ற அவையில் இடம்பெறப்போகும் “சோழர் செங்கோல்” குறித்தும் இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் செளந்திரபாண்டியன்  அறிக்கை விடுத்துள்ளார்.

இன்று  புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புவிழா நடைபெறுவது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வு.  ஒட்டு மொத்த இந்திய அரசியல் கட்சியினர், அனைத்து மக்களின் ஒருமித்த வாழ்த்துக்களுடன் இந்நிகழ்ச்சி நடைபெறவேண்டும் என்பதே இந்திய நாடார்கள் பேரமைப்பின் விருப்பமாகும். அனைத்து மக்களும், அனைத்து கட்சியினரும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதை இந்திய நாடார்கள் பேரமைப்பு வலியுறுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக சோழர்களின் செங்கோலை நிறுவவிருப்பது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம். 

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியில் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன்  ஆராய்ச்சியில் கண்டெடுத்த ஓலைச்சுவடிகளில் மூவேந்தர்கள் "நாடார்கள்" பரம்பரையினர் என்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார். இது நாடார்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் விதமாக இருக்கிறது. ஆக, நீதி தவறா ஆட்சி நடந்தேற செங்கோலை சாட்சியாக கொண்ட வரலாறு மீண்டும் திரும்புவதாகவே நாம் கருதுகிறோம்.

இன்று நாடாளுமன்றத்தை செங்கோல் அலங்கரிக்க போவது கண்டு ஒட்டு மொத்த தமிழினமே மகிழ்கிறது. இந்தியாவின் பெருமையை போற்றும் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வினை உருவாக்கியிருக்கும் பிரதமர் மோடி  இந்திய நாடார்கள் பேரமைப்பு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.  இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து