முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எஸ்.டோனியை போல செயல்படுகிறார்: ஹர்திக் கேப்டன்ஷிபை புகழ்ந்த சுனில் கவாஸ்கர்

சனிக்கிழமை, 27 மே 2023      விளையாட்டு
Gavaskar 2023 05 27

Source: provided

மும்பை : ஹர்திக் கேப்டன்ஷிப் டோனி போல உள்ளதாக இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 16-வது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இந்த சீசனின் இறுதி போட்டிக்கு சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தி சிஎஸ்கே அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. எலிமினேட்டரில் ஜெயித்த மும்பை இந்தியன்சும், குஜராத் டைட்டன்சும் 2-வது குவாலிபையர் சுற்றில் மோதின.

குஜராத் வெற்றி...

இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 233 ரன்களை குவித்தது. இதனையடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் டோனியை போலவே அணியை அமைதியான சூழலில் பாண்ட்யா வைத்திருக்கிறார் என கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.

முன்மாதிரியாக... 

இது குறித்து ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:- ஹர்திக் பாண்ட்யா டோனியை முன்மாதிரியாக பின்பற்றுகிறார். டாஸ் போடும்போது டோனி எதிரணியுடன் நட்புடன் தான் இருப்பார். முகத்தில் சிரிப்பெல்லாம் இருக்கும். ஆனால் போட்டியின்போது சூழலே வேறு மாதிரி இருக்கும். ஹர்திக் பாண்ட்யா மிக விரைவில் கேப்டன்சியை கற்றுக்கொண்டுவிட்டார்.

அமைதியான சூழலில்... 

கடந்த ஆண்டு முதல்முறையாக கேப்டன்சி செய்தபோதே ஹர்திக் பாண்ட்யா மிரட்டிவிட்டார். டோனியை போலவே அணியை அமைதியான சூழலில் பாண்ட்யா வைத்திருக்கிறார். சிஎஸ்கே அணியை போலவே ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி செய்யும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மகிழ்ச்சியான அணியாக உள்ளது. அதற்கான முழு கிரெடிட்டும் ஹர்திக் பாண்ட்யாவுக்கே. என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து